கோப்பையை வென்ற பிரான்ஸ்.. மனதை வென்ற குரோஷிய பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 02:31 pm
croatia-president-won-many-fans-heart-after-wc-finals

கால்பந்து உலக கோப்பை போட்டியின் குரோஷியா மற்றும் பிரான்ஸ் பிரதமர்கள் நடந்து கொண்ட விதம் உலகளவில் பலரையும் கவர்ந்துள்ளது. 

ஃபிபா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோஷிய அணியை வீழ்த்தி 20 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒருபக்கம் கால்பந்து போட்டிகள் நடக்க, மற்றொ ரு பக்கம் விளையாடிய இரண்டு அணியின் நாட்டு பிரதமர்களும் மக்கள் மனதை கவர்ந்துள்ளனர். குரோஷிய பிரதமர் கொலிண்டா கிராபர்- கிட்டாரோவிக், ரஷ்ய பிரதமர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் போட்டியை நேரில் காண வந்தனர். மற்ற இருவரும் கோட் சூட்டில் வர குரோஷிய பிரதமர் கொலிண்டா தங்கள் அணி ஜெர்ஸி அணிந்து வந்திருந்தார். 

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இம்மானுவேல் மற்றும் கொலிண்டா இரு அணிகளையும் உற்சாகப்படுத்தினர்.  பிரான்ஸ் வென்ற பிறகு அதனை இம்மானுவேல் கொண்டாடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், கோப்பையை வழங்கும் போது கொலிண்டா இரு அணி வீரர்களையும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் கவர்ந்தது. 

இந்த தொடரில் குரோஷிய அணி விளையாடிய அனைத்து போட்டிகளையும் காண கொலிண்டா நேரில் வந்திருந்தார். ஒவ்வொரு முறையும் குரோஷியாவில் இருந்து ரஷ்யாவிற்கு எக்கனாமிக் கிளாஸ் விமானத்தில் வந்து ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை கண்டுள்ளார். மேலும் கோப்பைகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் போது திடீரென்று மழை பெய்ய ரஷ்ய அதிபருக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டது. ஆனால் மேக்ரானும், கொலிண்டாவும் மழையில் நனைந்தப்படி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தனர்.

கோப்பை யார் வென்றிருந்தாலும் ரசிகர்கள் மனதை இவர்கள் இருவரும் வென்று விட்டதாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கொலிண்டாவுக்கு ஆர்மியெல்லாம் தொடங்கப்பட்டு இருப்பதாக செய்தி...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close