தீராத கொண்டாட்டம்: சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பளித்த பிரான்ஸ்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 10:27 am
champion-team-given-heroes-welcome-in-paris

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பாரிசில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்தியாவிற்கு கிரிக்கெட் எப்படியோ உலகளவில் பல நாடுகளுக்கு கால்பந்து. நாம் கிரிக்கெட்டை கொண்டாடுவது போல கால்பந்து பல நாட்டினரால் கொண்டாடப்படுகிறது. இப்படி இருக்க கால்பந்து உலக கோப்பையை வெல்லும் அணியினரை அந்தநாட்டு மக்கள் எப்படி கொண்டாடி இருப்பார்கள்..

ரஷ்யாவில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் குரோஷிய அணியை பிரான்ஸ் அணி வென்று சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு  அந்நாட்டிற்கு சாம்பியன்ஸ் பட்டம் கிடைத்துள்ளது. பிரான்ஸ் வெற்றிப் பெற்ற தருணத்தில் இருந்து தற்போது வரை அந்நாட்டின் வெற்றிக் கொண்டாட்டம் முடியவில்லை. 

கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி நேற்று சொந்த நாட்டிற்கு திரும்பியது. அவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் கட்டியணைத்து வரவேற்பு அளித்தார். பின்னர் சாம்பியன்ஸ் வாகனத்தில் அவர்கள் பாரிஸ் நகரை வலம் வந்தனர். வழி நெடுகும் இருந்த ரசிகர்கள் கால்பந்து அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அதிபர் மாளிகையில் அணியினருக்கு  சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close