செப்டம்பர் 29ல் தொடங்குகிறது இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள்

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 09:04 am
indian-super-league-to-begin-on-september-29

கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் தொடங்க உள்ளன.  

கிரிக்கெட்டுக்கு இந்தியன் பிரீமியர் லீக் தொடரை போலக் கால்பந்துக்கென்று இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு விளையாட்டு போட்டி இந்தியன் சூப்பர் லீக் தொடர். கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 5வது சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியானது. இதில் சென்னையின் எப்.சி.,  அட்லெடிகோ டி கொல்கத்தா, புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ் உள்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 

வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன. 

சென்னையின் எப்.சி. அணியின் முதலாவது உள்ளூர் லீக் ஆட்டம் அக்டோபர் 6ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்திக்கிறது. டிசம்பர் 16ம் தேதி வரை மட்டுமே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும் லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close