சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரொனால்டோவின் பைசைக்கிள் கிக்!

  shriram   | Last Modified : 30 Aug, 2018 04:19 am
ronaldo-s-overhead-kick-chosen-as-uefa-s-best-goal

ஜுவென்டஸ் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல், கடந்த சீசனுக்கான சிறந்த ஐரோப்பிய கோல் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த மாதம் அவரை, ரியல் மாட்ரிட் அணியிடம் இருந்து இத்தாலி நாட்டை சேர்ந்த ஜுவென்டஸ் 100 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில், ஜுவென்டஸ் அணிக்கு எதிராக விளையாடினார் ரொனால்டோ. அப்போது அவர் அடித்த பைசைக்கிள் கிக் கோல் எதிரணி ரசிகர்களால் கூட பாராட்டப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சீசனின் சிறந்த கோல் எது என தேர்ந்தெடுக்க ஐரோப்பிய கால்பந்து கழகம் வாக்குப்பதிவு நடத்தியது. பெண்கள், சிறுவர்கள் என பல பிரிவுகளில் அடிக்கப்பட்ட சிறந்த கோல்களை தேர்ந்தெடுத்து, அதில் ஒன்றுக்கு இந்த விருது வழங்கப்படும். ஐரோப்பிய ஆடவர் கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோவின் கோல் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம் வாக்களித்த 3.5 லட்சம் பேரில், சுமார் 2 லட்சம் பேர் ரொனால்டோவின் கோலுக்காக வாக்களித்தனர். கால்பந்து விளையாட்டிலேயே மிகவும் கடினமாக பார்க்கப்படுவது பைசைக்கிள் கிக் கோல்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோவின் கோல் உட்பட மற்ற கோல்களை வீடியோவில் பாருங்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close