ஐஎஸ்எல்: நடப்பு சாம்பியன் சென்னை போராடி தோல்வி!

  shriram   | Last Modified : 01 Oct, 2018 05:00 am
isl-bengaluru-beat-chennaiyin-fc

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சென்னையின் எஃப்.சி-யை பெங்களூரு அணி வீழ்த்தியது. 

பிரபல இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. கடந்த சீசனில், சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இறுதி போட்டியில் மோதிய பெங்களூரு அணியுடன் நேற்று பலப்பரீட்சை செய்தது. கடந்த இறுதிப் போட்டியில் கோப்பையை இழந்ததால், பழிதீர்த்துக் கொள்ள, தங்களது ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கினர் பெங்களூரு வீரர்கள். 

போட்டியின் துவக்கம் முதல் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. சிறப்பாக டிபெண்ட் செய்து விளையாடியது மட்டுமல்லாமல், பெங்களூருவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. முதல் பாதியில் இரண்டு சூப்பர் வாய்ப்புகளை, சென்னை ஸ்ட்ரைக்கர் ஜேஜே வீணடித்தார். தடுமாறி வந்த பெங்களூரு அணியின் மிகு, சென்னை வீரர் செய்த சிறிய தவறிய பயன்படுத்தி 41வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதியில் பெங்களூரு 1-0 என முன்னிலை பெற்றிருந்தது 

இரண்டாவது பாதியில், சென்னையின் வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால், பெங்களூருவின் இறுக்கமான டிபெண்டிங்கால் போட்டி 1-0 என முடிந்தது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close