கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் வன்கொடுமை விசாரணை!

  shriram   | Last Modified : 02 Oct, 2018 08:54 pm
rape-case-reopened-after-ronaldo-allegations

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, 2009ம் ஆண்டில் மூடப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

33 வயதான ரொனால்டோ, சில மாதங்களுக்கு முன், ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சுமார் 750 கோடி தொகை கொடுத்து வாங்கப்பட்டார். இந்நிலையில், 2009ம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேத்தரின் மையோர்கா என்ற அமெரிக்க பெண், டெர் ஸ்பீகல் என்ற பத்திரிகையில் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என ரொனால்டோ மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக 2009ம் ஆண்டு போலீசாரிடம் புகார் அளித்ததாகவும், அதன்பின், இந்த விஷயம் வெளியில் வராமல் இருக்க, ரொனால்டோவுடன் சுமார் 2.75 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஒப்பந்தம் செல்லாது என மையோர்காவின் வழக்கறிகஞர்கள் கூறுகின்றனர். 2009ம் ஆண்டு மையோர்கா புகார் அளித்ததாக ஒப்புக்கொண்ட லாஸ் வேகாஸ் போலீசார், இந்த விவகாரத்தில் யார் மீதும் வழக்கு தொடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். தற்போது, மையோர்காவின் பேட்டியை தொடர்ந்து, வழக்கை மீண்டும் விசாரிக்கத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெர் ஸ்பீகல் பத்திரிகையின் மீது அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளதாக ரொனால்டோ தரப்பினர் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close