ஐ.எஸ்.எல்: மும்பையை போராடி வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்!

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2018 03:18 am
jamshedpur-beat-mumbai-city-fc

மும்பை சிட்டி எஃப்.சி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கடுமையாக போராடிய ஜாம்ஷெட்பூர், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில், அந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். ஆரம்பத்தில் மும்பை ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், சிறப்பாக விளையாடிய ஜாம்ஷெட்பூர் வீரர்கள், 28வது நிமிடத்தில் இரண்டு பக்கமும் இருந்து மாறி மாறி கிராஸ் செய்ய, மாரியோ மார்க்கெஸ் தலையால் முட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதியில் ஸ்கோர் 1-0 என இருந்தது. 

அதன்பின், மீண்டும் மும்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை மும்பை அடித்த கோல்கள் ஆப்ஸைடு வழங்கப்பட்டு மறுக்கப்பட்டன. 84வது நிமிடத்தில் மச்சாடோ அடித்த ப்ரீ கிக் வாய்ப்பு கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. பல வாய்ப்புகளை மும்பை தொடர்ந்து மிஸ் செய்ய, ஆட்டம் முடியும் கடைசி நேரத்தில், ஜாம்ஷெட்பூர் வீரர் மொர்காடோ கோல் அடித்தார். 2-0 என சொந்த ரசிகர்கள் முன்னிலையிலேயே மும்பையை தோற்கடித்தது ஜாம்ஷெட்பூர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close