• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

பலோன் டி'ஓர் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ, மாட்ரிச்!

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 04:38 pm

messi-ronaldo-modric-lead-ballon-d-or-contenders

2018ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதுக்கு, நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூக்கா மாட்ரிச், நெய்மார் உள்ளிட்ட 30 வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், கால்பந்து உலகின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதுக்கு தேர்வாகியுள்ள வீரர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார், மாட்ரிச் உள்ளிட்ட 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

பார்சிலோனா அணிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸி, கடந்த ஆண்டில் ஸ்பானிஷ் லீக் மற்றும் கோப்பையை வென்றுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 41 கோல்களை அடித்துள்ளார். 19 கோல்கள் அடிக்க தனது அணி வீரர்களுக்கு உதவியுள்ளார். ஆனால், உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் தலைமையில் விளையாடிய அர்ஜென்டினா, பிரான்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. தொடரில் மெஸ்ஸி ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்.

போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை தனது ரியல் மாட்ரிட் அணிக்காக வென்றார். 38 போட்டிகளில் 38 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. உலகக் கோப்பையில் ரொனால்டோவும் போர்ச்சுகல் அணியை காலிறுதிக்கு முன்னேற்ற முடியாமல் வெளியேறினார். 

ஆனால், லூக்கா மாட்ரிச், ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் கோப்பை வென்றது மட்டுமல்லாமல், கத்துக்குட்டியான குரேஷியா அணியை உலக கோப்பை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இதற்காக, உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதையும், 2017-18ன் சிறந்த ஐரோப்பிய வீரர், 2017-18ல் பிபாவின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை மாட்ரிச் வென்றார். இதனால், பலோன் டி'ஓர் விருதை மாட்ரிச் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இவர்கள் போக, நெய்மார், காரெத் பேல், ஈடென் ஹசார்டு உள்ளிட்ட 27 வீரர்களும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். இறுதியாக 3 பேரை தேர்வு செய்து, டிசம்பர் மாதம் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விருது வழங்கப்படும். 

newstm.in
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close