2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்?

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2018 07:08 pm
bjp-eyes-dhoni-and-gambhir-for-2019-elections

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் கௌதம் காம்பீர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதான காட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் அரசியல் பிரவேசம் பற்றி திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் கௌதம் காம்பீர் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தேசிய அணியில் இருந்து ஓய்வுபெற்ற காம்பீர், விஜய் ஹசாரே ட்ராபி தொடரின் இறுதி போட்டி வரை தனது டெல்லி அணியை அழைத்து சென்றார். இறுதிப் போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்தாலும், சிறப்பான பார்மில் இருந்து வருகிறார் காம்பீர். இந்நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2019 தேர்தலில் போட்டியிட உள்ளதாக பா.ஜ வட்டாரங்களில் பேசப்படுகிறது. டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகிக்கு பதிலாக காம்பீர் நிற்கலாம் என கூறப்படுகிறது. 

அதேபோல, தோனியையும் கட்சியில் சேர்க்க பா.ஜ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் தொகுதியில் பாரதிய ஜனதாவின் சார்பாக அவர் நிற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close