ஐ.எஸ்.எல்: சென்னையின் எஃப்.சி மீண்டும் சொதப்பல்; டெல்லியுடன் டிரா!

  டேவிட்   | Last Modified : 24 Oct, 2018 11:43 am
chennaiyin-fc-still-without-a-win

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது. 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றை லீக் ஆட்டத்தில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில், 3 தோல்வி, ஒரு டிரா என சொதப்பலாக விளையாடி வருகிறது நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்.சி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close