ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 12:34 am
isl-football-north-east-united-beat-delhi-dynamos

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி டைனமோஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இதன் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 0-0 என்ற சமநிலை இருந்தது. 

இரு அணிகளும் கோல் அடிக்காததால் 2-ஆவது பாதி ஆட்டம் விறுவிறுப்புடன் சென்றது. போட்டி முடிவதற்கு 7 நிமிடம் முன்பு நார்த் ஈஸ்ட் அணி வீரர் ஃபெட்ரிகோ கலேகோ முதல் கோலை அடித்தார்.  90 நிமிடங்கள் ஆன பிறகு கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில், 90+3 நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பார்த்தலோமியோ ஓக்பெசே ஒரு கோல் அடித்தார். 

இதன்மூலம், இந்தப் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நார்த் ஈஸ்ட் அணி 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.. 

சென்னையின் எப்சி அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டி மட்டும் டிரா செய்து புள்ளிப்பட்டியலில் வெறும் 1 புள்ளியுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close