2022 உலககோப்பை கால்பந்து: 48 அணிகள்?

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 03:22 pm
48-teams-in-2022-world-cup

கத்தாரில் வரும் 2022ஆம் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க முய்றசிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர்  கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். 

வரும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறவள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டே இப்போட்டியை கத்தாரில் நடத்த ஃபிஃபாவின் உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் கூட்டத்தில் பேசிய ஃபிஃபா தலைவர்  கியானி இன்பான்டினோ, 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு கத்தாரில் 48 அணிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதா என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த இன்பான்டினோ, கத்தார் ஒரு சிறிய வளைகுடா நாடு. இருப்பினும் கத்தார் நண்பர்களிடம் இது பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், ஒரு வேளை இதற்கு வாய்ப்புகள் இருந்தால் 2022ஆம் ஆண்டிலேயே, கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் பங்கேற்கலாம் எனவும் இன்பான்டினோ தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close