ஐ.எஸ்.எல்: முதல் வெற்றிக்காக போராடும் டெல்லி அணி, ஜாம்ஷெட்பூரிடம் தோல்வி!

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 10:52 am
delhi-s-losing-face-continues

கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்ற டெல்லியில் நடந்த போட்டி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் முடிந்தது. 

ஐ.எஸ்.எல். கால்பந்து  தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த செர்ஜியோ சிடோன்சா முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.


 
இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், டெல்லி அணியின் லாலியன்ஜுவாலா சாங்கே 55வது நிடத்திலும், அட்னா கமோனா 58வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர். இதற்கு பதிலடியாக, ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோஸ் லூயிஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2  என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடம் பிடித்துள்ளது.  டெல்லி அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய தொடர்ந்து போராடி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close