ஐ.எஸ்.எல். கால்பந்து -புனேவை வீழத்தியது சென்னையின் எப்சி அணி

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 07:57 am
isl-football-chennai-jaipur-teams-won-the-matches

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியனின் முதல் கோல் மூலம் புனே அணி முன்னிலை வகித்தது. 

பின்னர், சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close