மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 05:22 pm
manchester-united-beat-juventus-2-1

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் குரூப் போட்டியில், அதிரடியாக விளையாடிய ஜுவென்டஸ் அணியை, கடைசி நேர கோல்கள் மூலம் வீழ்த்தி மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. 

தொடர் வெற்றிகளை குவித்து வரும் இத்தாலியை சேர்ந்த ஜுவென்டஸ் அணி, சொதப்பலாக விளையாடி வரும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மோதியது. முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது ஜுவென்டஸ் அணிக்கு விளையாடி வருவதால், போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது.

இத்தாலியில் உள்ள அல்லையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆயிரக்கணக்கான தங்களது சொந்த ரசிகர்கள் முன்னால், சிறப்பான துவக்கத்தை பெற்றது ஜுவென்ட்ஸ். தொடர்ந்து பல வாய்ப்புகளை ஜுவென்டஸ் வீரர்கள் உருவாக்கினர். ஜுவென்டஸின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், யுனைட்டட் அணி திணறியது. ஆனால், முதல் பாதி, கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 

இரண்டாவது பாதியில், மீண்டும் ஜுவென்டஸ் சிறப்பாக விளையாடியது. 65வது நிமிடத்தில், முன்னாள் யுனைட்டட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சூப்பர் கோல் அடித்து ஜுவென்டஸ் அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் மான்செஸ்டர் யுனைட்டட் அணி பல வாய்ப்புகளை உருவாக்கியது. 85வது நிமிடத்தில், அந்த அணியின் யுவான் மாட்டா கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, யுனைட்டட் வீரர் அடித்த க்ராஸ், ஜுவென்டஸ் வீரர் மேல் பட்டு கோலுக்குள் சென்றது. 2-1 என முன்னிலை பெற்று யுனைட்டட் த்ரில் வெற்றி பெற்றது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close