ஐ.எஸ்.எல். கால்பந்து - டெல்லியை வீழ்த்திய கோவா

  டேவிட்   | Last Modified : 09 Nov, 2018 07:49 am
isl-football-goa-beat-delhi

 ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது.

கோவா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது. தொடக்கத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை கொடுத்தனர். 

இதன் மூலம் கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், மும்பை சிட்டி அணியும் மோதுகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close