ஐஎஸ்எல் கால்பந்து: புனே சிட்டியை  வீழ்த்தியது கொல்கத்தா

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 12:32 pm
isl-football-kolkatta-beat-pune

ஐஎஸ்எல் கால்பந்தில் எஃப்சி புனே சிட்டி அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா-புனே அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 2-ஆவது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் பிரணாய் ஹால்டர் கோல் போட முயன்றது போது, புனே கோல் கீப்பர் கமல்ஜித் சிங் அதனை தடுத்தார். 

ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் வைர்ரா ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட முயற்சித்தபோது, அது தவறியது. அதன்பிறகும், முதல் பாதி ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் போடாததால் முதல் பாதி ஆட்டத்தில் 0-0 என்ற நிலை இருந்தது.  

இந்நிலையில், போட்டியின் 82-ஆவது நிமிடத்தில் வைர்ரா பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். இதன்மூலம், போட்டியின் முதல் கோலை அடித்த கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டி முடியும் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. 

இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 7 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி மொத்தம் 10 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், புனே அணி 7 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close