மெஸ்ஸி திரும்ப வரவேண்டும் - அர்ஜென்டினாவின் டிபாலா

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 06:27 am
we-want-messi-to-come-back-dybala

உலகக் கோப்பை தோல்விக்கு பின் தேசிய அணியில் இருந்து விலகி இருக்க போவதாக கூறிய அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, திரும்பி வரவேண்டும் என்று அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான பாலோ டிபாலா வலியுறுத்தியுள்ளார்.

2018 உலக கோப்பையில், பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணி சொதப்பலாக விளையாடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே நாக் அவுட் ஆனது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இருந்தாலும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தார். உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, உள்ளிட்ட கடந்த மூன்று தொடர்களில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா இறுதி போட்டி வரை சென்று போராடி தோற்றது. உலக கோப்பையிலும் நாக் அவுட் ஆனதை தொடர்ந்து, மெஸ்ஸி அணியில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்தார். 31 வயதான மெஸ்ஸி, கிளப் அளவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி நூற்றுக்கணக்கான கோல்களை அடித்துள்ளார்.

உலகின் சிறந்த வீரராகக் கருதப்படும் இவர், அர்ஜென்டினா அணிக்காக சமீப காலத்தில் எந்த கோப்பையும் வெல்லவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அவருக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நெருக்கடியின் காரணமாகவே, அவர் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. தற்போது அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, அர்ஜென்டினா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் மற்றொரு நட்சத்திர வீரரான டிபாலா, மெஸ்ஸி திரும்பவும் தேசிய அணியில் விளையாட வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "எங்கள் எல்லோருக்குமே மெஸ்ஸி தேசிய அணிக்கு திரும்ப வரவேண்டும் என்பதுதான் ஆசை. அவர் எவ்வளவு முக்கியமான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் முடிவு எடுக்க வேண்டியது அவர் தான்" என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close