மெஸ்ஸி அதிரடி; பார்சிலோனா சூப்பர் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 04:00 pm
messi-shines-as-barcelona-top-champions-league-group

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால், நெதர்லாந்தை சேர்ந்த பிஎஸ்வி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது.

ஐரோப்பிய டாப் அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா, நெதர்லாந்தின் பி.எஸ்.வி அணியுடன் மோதியது. நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில், 3 வெற்றி, ஒரு டிரா என சிறப்பாக விளையாடி வருகிறது பார்சிலோனா. காயம் காரணமாக சிகிச்சை பெற்று திரும்பியபின் மெஸ்ஸி விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும். 

பலம்வாய்ந்த பார்சிலோனாவுக்கு, இளம் பி.எஸ்.வி அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. பல கோல் வாய்ப்புகளை பிஎஸ்வி உருவாக்கினாலும், பார்சிலோனா கோல் கீப்பர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைத்தையும் தடுத்தார். முதல் பாதியில் பார்சிலோனா சொதப்பலாகவே விளையாடியது. 

இரண்டாவது பாதியில், பார்சிலோனா கொஞ்சம் கொஞ்சமாக கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. மெஸ்ஸியின் தலைமையி தொடர்ந்து வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 60வது நிமிடத்தின் போது, அசத்தலாக இரண்டு 3 பேரை தாண்டி சென்று சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 70வது நிமிடத்தில் ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, மெஸ்ஸி பந்தை கோலை நோக்கி அடித்தார். அப்போது குறுக்கே நின்ற பார்சிலோனா அணியின் பீக்கே, பந்தை கோலுக்குள் தள்ளினார். 82வது நிமிடத்தில் சிறப்பாக விளையாடிய பிஎஸ்வி வீரர் டி யாங், தனது அணிக்காக ஒரு ஆறுதல் கோல் அடித்தார். 2-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, சாம்பியன்ஸ் கோப்பையின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பார்சிலோனா முன்னேறியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close