ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:32 am
isl-football-chennai-mumbai-teams-face-today

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை எப்.சி. அணி, மும்பை சிட்டி அணியுடன் மோதுகிறது. 

5வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில்,  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பெங்களூரு எப்.சி. அணி மோதியது. இதில் இரண்டு அணிகளும் 1-1 என கோல் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து  பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி அணியை எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வியை கண்டுள்ளது. இதனால், சென்னை அணி இனிவரும் அனைத்து தொடர்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5 வெற்றி, 2 டிரா பெற்று 2 தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close