மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது வலென்சியா

  shriram   | Last Modified : 13 Dec, 2018 04:59 pm
champions-league-valencia-beat-manchester-united

சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி சுற்று குரூப் போட்டியில், பிரீமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைட்டட் அணியை ஸ்பெயின் நாட்டின் வலென்சியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கால்பந்தின் மிகப்பெரிய க்ளப் சாம்பியன்ஷிப் தொடரான சாம்பியன்ஸ் லீக்கின் இறுதி சுற்று குரூப் போட்டியில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் ஸ்பெயினின் வலென்சியா மோதியது. ஏற்கனவே அந்த குரூப்பில் இருந்து மான்செஸ்டர் யுனைட்டட் அணியும், ஜுவென்டஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன. வலென்சியா அணி 3வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து நாக் அவுட் செய்யப்பட்டாலும், இரண்டாம் தர தொடரான யூரோப்பா லீக்கில் விளையாடும் வாய்ப்பு வலென்சியாவுக்கு கிடைக்கும் நிலையில், அந்த அணி களமிறங்கியது.

சிறப்பாக விளையாடிய வலென்சியா வீரர்கள் யுனைட்டட் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். 17வது நிமிடத்தின் போது, வலென்சியா அணியின் சோலர், அசத்தலான ஒரு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடங்களிலேயே, யுனைட்டட் அணியின் பில் ஜோன்ஸ் செய்த ஒரு தவறால், பந்து அவரது கோலுக்குள்ளேயே சென்றது. வலென்சியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. யுனைட்டட் அணி, தொடர்ந்து போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. ஆனால், கடைசி நேரத்தில், அந்த அணியின் இளம் வீரர் ராஷ்போர்டு ஒரு ஆறுதல் கோல் அடித்தார். 2-1 என வெற்றி பெற்று, யூரோப்பா லீக்கில் தனது இடத்தை வலென்சியா உறுதி செய்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close