சேத்ரி, குர்ப்ரீத் கையில் தான் எல்லாமே உள்ளது: பூட்டியா

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:32 am
chhetri-and-gurpreet-should-lead-from-the-front-bhutia-on-asia-cup

ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகிவரும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் அனைத்துமே, கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் நட்சத்திர வீரர் குர்ப்ரீத் சிங் சந்து ஆகியோரை நம்பியே உள்ளது, என முன்னாள் இந்திய வீரர் பாய்ச்சுங் பூட்டியா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவங்குகிறது. 8 வருடங்களுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை 2011 ஆசிய கோப்பையில் விளையாடிய போது, இந்திய அணி எல்லா போட்டிகளிலும் தோற்ற நிலையில், இந்த முறை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் நாளை தாய்லாந்துடன் இந்தியா மோதுகிறது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுடன் மோதுகிறது.

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து பேசிய முன்னாள் நட்சத்திர வீரர் பூட்டியா, "இரண்டு பேர் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பார்கள். கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் குர்ப்ரீத் சிங் சந்து. இருவருக்குமே ஆசிய கோப்பையில் விளையாடிய அனுபவம் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் இளம் வீரர்களே உள்ள நிலையில், அவர்களை வழி நடத்திச் செல்ல இவர்கள் இருவரும் முன்னே நிற்க வேண்டும்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close