கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மருத்துவமனையில் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:09 am
maradona-admitted-in-hospital

கால்பந்து சரித்திரத்திலேயே சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் டியேகோ மாரடோனா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சுமார் 5 மணி நேரம் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். 

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து உலக சாம்பியன் மாரடோனா, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு 2005ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சிகிச்சையின் காரணமாக வயிற்று பகுதியில் புண் ஏற்பட்டு, உடலுக்கு உள்ளேயே சிறிதளவு ரத்தம் வெளியேறியுள்ளது. அவர் மீது பல சோதனைகள் செய்தபின், சுமார் 5 மணி நேரத்திற்கு பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close