55 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 06:42 am
sunil-chhetri-s-brace-helps-india-beat-thailand

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் தாய்லாந்துடன் மோதிய முதல் போட்டியில், கேப்டன் சேத்ரியின் அட்டகாசமான ஆட்டத்தால் இந்தியா 4-1 என அபார வெற்றி பெற்றது. 

2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தற்போது தான் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில், இந்தியா - தாய்லாந்து நாட்டுடன் மோதியது. இதற்கும் முன், 1986 ஆண்டில்தான் தாய்லாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது. அதனால், வெற்றியுடன் தொடரை துவக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

27வது நிமிடத்தில், தாய்லாந்து வீரர் கையில் பந்து பட்டதால், இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். சர்வதேச அளவில் சேத்ரி அடிக்கும் 66வது கோல் இதுவாகும். இதைத்தொடர்ந்து, 33வது நிமிடத்தில் தாய்லாந்து அணியின் டங்டா, தலையால் முட்டி கோல் அடித்து சமன் செய்தார்.

முதல் பாதி 1-1 என முடிந்த நிலையில், இரண்டாவது பாதி துவங்கிய ஒரு சில வினாடிகளிலேயே, இந்திய அணி அட்டகாசமாக அட்டாக் செய்தது. அப்போது சுமார் 25 அடி தூரத்தில் இருந்து, சுனில் சேத்ரி சூப்பர் கோல் அடித்து, மீண்டும் இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்தார். 68வது நிமிடத்தில் இந்தியாவின் அனிருத் தாபா அசத்தலான கோல் அடித்தார். தொடர்ந்து இந்திய அணி அட்டாக் செய்து வந்தது. மாற்று வீரராக நுழைந்த ஜேஜே, களத்தில் இறங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே கோலடித்தார். இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 55 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்தியா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close