ஆசிய கோப்பை: பாலஸ்தீனத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 07:54 am
asian-cup-australia-crush-palestine-3-0

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய குரூப்-பி போட்டியில், ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி பாலஸ்தீனத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், குரூப்-பி-யின் ஆஸ்திரேலிய - பாலஸ்தீன அணிகள் நேற்று மோதின. முதல் போட்டியில் ஜோர்டன் அணியுடன் தோற்றிருந்த ஆஸ்திரேலியா, இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இருந்தது. ஜார்டான் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே பாலஸ்தீனத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடியது. 17வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜேமி மெக்லாரன் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவெர் மபில் கோல் அடித்தார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியா, பாலஸ்தீனத்தை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக டிபன்ஸ் செய்து விளையாடியது. ஆட்டம் முடியும் கடைசி நிமிடங்களில், ஆஸ்திரேலிய அணியின் அபோஸ்தலஸ் ஜியான்னோ சூப்பர் கோல் அடித்து, 3-0 என ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா, 3வது இடத்தில் இருக்கும் சிரியாவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஜோர்டனுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close