வரி ஏய்ப்பு செய்த ரொனால்டோ! 23 மாதங்கள் சிறை தண்டனை

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 10:19 pm
ronaldo-gets-23-months-jail-sentence-for-tax-fraud

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, வரி ஏய்ப்பு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதால், அவருக்கு 23 மாதங்கள் சிறை தண்டனையும், 150 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு, ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வரை சுமார் ஒன்பது ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார் ரொனால்டோ. சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில், இத்தாலி நாட்டை சேர்ந்த ஜுவென்டஸ் அணி ரொன்டோவை கடந்த ஆண்டு வாங்கியது.

2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டில் ஒழுங்காக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக ரொனால்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். இந்நிலையில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ஸ்பெயின் நீதிமன்றம் அவருக்கு 23 மாத சிறை தண்டனையும் 152 கோடி ரூபாய் அளவில் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டு சட்டத்தின் படி, சிவில் குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை பெற்றால், சிறை செல்ல தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close