ஐஎஸ்எல்: பெங்களூருக்கு முதல் தோல்வியை வழங்கிய மும்பை!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 04:58 am
isl-bengaluru-fc-beaten-by-mumbai-city-fc

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதல் இரண்டு இடங்களில் உள்ள பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில், மும்பை 1-0 என வெற்றி பெற்று, இந்த சீசனில் பெங்களூருக்கு முதல் தோல்வியை வழங்கியது.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடி முறையே முதல் இரண்டு இடங்களில் இருந்த பெங்களூரு மற்றும் மும்பை அணிகள், முக்கிய போட்டியில் நேற்று மோதின. இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்த பெங்களூரு அணி, மும்பையிடம் 1-0 என போராடி தோற்றது. 

துவக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் அட்டாக் செய்து மும்பைக்கு நெருக்கடி கொடுத்தது பெங்களூரு. தொடர்ந்து கார்னர் கிக் வாய்ப்புகள் மூலம் கோல் அடிக்க பெங்களூரு முயற்சித்து வந்தது. ஆனால், 29வது நிமிடத்தில், பெங்களூருக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை வீழ்த்தி, மும்பை அணி அதிரடியாக அட்டாக் செய்ய, அந்த அணியின் பாலோ மச்சாடோ கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் கோல் விழவில்லை. போட்டி 1-0 என மும்பைக்கு சாதமாக முடிந்தது. 

இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ள பெங்களூரு அணி, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள மும்பை அணி, பெங்களூரை போலவே 27 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அதிக கோல்கள் அடித்துள்ளதால் முதலிடத்தை பிடித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close