10-20 ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்கும்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:44 pm
india-will-play-in-the-world-cup-in-10-20-years-lizarazu

1998ம் ஆண்டு, கால்பந்து உலக கோப்பையை வென்றவரும், பிரான்ஸ் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பிக்சன்ட்டே லிசரசு, இன்னும் 10-20 ஆண்டுகளில் இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கும், என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கால்பந்து மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்திய வீரர்கள் தற்போது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்து விளங்குவதாகவும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னாள் உலக கோப்பை மற்றும் யூரோ கோப்பை வெற்றியாளர் லிசரசு தெரிவித்துள்ளார். இதனால், இன்னும் 10-20 ஆண்டுகளில் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

"நான் இதுவரை 2 முறை மட்டுமே இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு புரட்சியை பார்க்கிறேன். இங்கு விளையாடும் விதம் மாறி வருகிறது. தற்போது வீரர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறிய பாஸ்கள் மூலம், கட்டுக்கோப்பாக விளையாடுகின்றனர். இளைய தலைமுறையினர் கால்பந்தின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளனர். 10 ஆண்டுகள் அல்லது 20 வருடங்களில் இந்திய அணி உலக கோப்பையில் விளையாடும் என நான் எதிர்பார்க்கின்றேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close