பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ஃப்ளமெங்கோவின் பயிற்சி கட்டிடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் ப்ளமெங்கோவின் மைதானம் மற்றும் அலுவலக கட்டிடங்கள், தலைநகர் ரியோவில் அமைந்துள்ளது. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய கால்பந்து கிளப்களுள் ஒன்றான ப்ளமெங்கோவில், ரொனால்டினோ உள்ளிட்ட பிரபல வீரர்கள் விளையாடியுள்ளனர்.
இந்த கட்டிடத்தின் பயிற்சி மையத்தில் திடீரென இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இளம் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், கால்பந்து உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in