ஐஎஸ்எல்: பெங்களூருக்கு ஷாக் கொடுத்த சென்னை!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 09:19 am
chennai-stunt-table-toppers-bengaluru

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதலிடத்தில் உள்ள பலம்வாய்ந்த பெங்களூரு எஃப்.சி அணியை, கடைசி இடத்தில் போராடி வரும் சென்னையின் எஃப்.சி அணி 2-1 என வீழ்த்தி ஷாக் கொடுத்தது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்.சி, பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதிய போட்டி, சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு, மோசமாக விளையாடி கடைசி இடத்தில் தள்ளாடி வரும் நடப்பு சாம்பியன்களான சென்னையுடன் மோதிய இந்த போட்டியின் முடிவால், லீக் பட்டியிலில் இரு அணிகளுக்கும் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதால், போட்டியின் மீது எதிர்பார்ப்பு மிக குறைவாக இருந்தது.

எதிர்பார்த்தது போலவே, பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. அந்த அணி வீரர்கள் நீண்ட நேரம் பந்தை பாஸ் செய்து விளையாடினாலும், வாய்ப்புகளை அதிக அளவு உருவாக்கவில்லை. ஆனால், 32வது நிமிடத்தில் சென்னையின் ஜேஜே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி முடியும் நேரத்தில், சென்னையின் நெல்சன் மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதி 2-0 என முடிந்தது.

இரண்டாவது பாதியில், மீண்டும் பெங்களூரு நெருக்கடி கொடுத்து விளையாடியது. அதற்கு பலனாக, அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்த்ரி 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின், எவ்வளவு முயற்சித்தும், போட்டியை பெங்களூரால் சமன் செய்ய முடியவில்லை. 2-1 என சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, 15 போட்டிகளில் இரண்டே இரண்டு வெற்றியுடன் சென்னை அணி கடைசி இடத்தில் தொடர்கிறது. தோல்வியடைந்தாலும், இரண்டாவது இடத்தில் உள்ள மும்பையை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று, பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close