சாம்பியன்ஸ் லீக்: டாட்டன்ஹேம் அட்டகாச வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 07:57 pm
champions-league-spurs-beat-dortmund

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இங்கிலாந்தை சேர்ந்த டாட்டன்ஹேம், ஜெர்மனியை சேர்ந்த பொருஸ்ஸியா டார்ட்மண்ட் அணிகள் மோதிய போட்டியில், டாட்டன்ஹேம், 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், லண்டனைச் சேர்ந்த டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் ஜெர்மனியின் பொருஸ்ஸியா டார்ட்மண்ட் அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும், கடும் நெருக்கடி கொடுத்து சிறப்பாக விளையாடினார். ஆனால், இரு அணிகளின் டிபன்ஸும், சிறப்பாக செயல்பட்டதால், கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடமே, டார்ட்மண்ட் வீரர்கள் செய்த தவறால், டாட்டன்ஹேமின் தென்கொரிய வீரர் சன், சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆட்டம் முடியும் கடைசி நேரத்தில், டாட்டன்ஹேமின் டிபன்ஸ் வீரரான வெர்டோங்கன் மற்றொரு கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மாற்று வீரராக களமிறங்கிய லாரென்டே கோல் அடிக்க, 3-0 என டாட்டன்ஹேம் வெற்றி பெற்றது. 

இரண்டு போட்டிகள்ளாக நடைபெறும் இந்த சுற்றின் அடுத்த போட்டி, அடுத்த மாதம் 2ம் தேதி ஜெர்மனியில் நடைபெறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close