அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் திரும்பிய மெஸ்ஸி

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 04:28 pm
messi-returns-to-argentina-national-team

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பைக்கு பின் முதல்முறையாக, அர்ஜென்டினா தேசிய அணிக்காக, வரவிருக்கும் சர்வதேச நட்பு போட்டிகளில் விளையாட இருக்கிறார். 

அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். பெரும்பாலானோரால், உலகின் மிகச் சேர்ந்த கால்பந்து வீரர் என கருதப்படும் மெஸ்ஸி, தனது க்ளப் அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்றாலும், அர்ஜென்டினா அணியுடன் பெரிய கோப்பைகள் எதையும் வெல்லவில்லை. 2014 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று, கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா தோல்வியடைந்தது. 2018 உலகக் கோப்பையில், அர்ஜென்டினா பயிற்சியாளரின் தவறான முடிவுகளால் அந்த அணி காலிறுதிச் சுற்றிலேயே படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், சர்வதேச அணிக்காக மெஸ்ஸி விளையாடவில்லை.

இதுவரை நடைபெற்ற 6 நட்பு போட்டிகளிலும் மெஸ்ஸி கலந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போது மெஸ்ஸியின் பெயர் அர்ஜென்டினா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா மற்றும் மொரோக்கோ அணிகளுடனான போட்டியில் மெஸ்ஸி கலந்து கொள்ள உள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து கழகம் தெரிவித்துள்ளது. "மெஸ்ஸி மீண்டும் தேசிய அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளார்" என அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close