பாயர்ன் முனிச்சை நாக் அவுட் செய்தது லிவர்பூல்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 08:34 pm
liverpool-knocks-out-bayern-munich-from-uefa-champions-league

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல், பலம்வாய்ந்த பாயர்ன் முனிச்சை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16-ல் நேற்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல், ஜெர்மன் சாம்பியன் அணியான பாயர்னுடன் மோதியது. துவக்கம் முதலேயே லிவர்பூல் அணி அதிரடியாக விளையாடியது. 26வது நிமிடத்தில், அந்த அணியின் சாடியோ மானே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

அதன்பின், பாயர்ன் வீரர்கள் செய்த அதிரடி அட்டாக்கில், பந்து லிவர்பூல் வீரர் மாட்டிப் கால்களில் பட்டு கோலுக்குள் சென்றது. முதல் பாதியில் போட்டி 1-1 என சமமாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, 69வது  நிமிடத்தில், லிவர்பூல் அணியின் டிபன்ஸ் வீரர் வேன் டைக், கார்னர் கிக் வாய்ப்பை தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார். ஆட்டம் முடியும் நேரத்தில், முகமது சாலா கொடுத்த சூப்பர் பாஸை, லிவர்பூல் வீரர் மானே கோலுக்குள் தள்ளி, 3-1 என வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியை தொடர்ந்து, லிவர்பூல் அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால், பார்சிலோனா 5-1 என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லியோன் அணியை அபாரமாக வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close