காயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ! ரசிகர்கள் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 04:52 pm
ronaldo-forced-to-quit-match-due-to-injury

தேசிய அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், செர்பியாவுடன், போர்ச்சுகல் அணி போதிய நிலையில், போர்ச்சுகல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காயம் காரணமாக வெளியேறினார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான, தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், செர்பியாவுடன் நடப்பு சாம்பியன்களான போர்ச்சுகல் அணி மோதியது. துவக்கத்திலேயே சிறப்பாக விளையாடிய செர்பியா அணி, டாடிச் அடித்த பெனால்டி மூலம் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும்போது, போர்ச்சுகல் அணியின் டேனிலோ சூப்பர் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

31வது நிமிடத்தின் போது, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காயம் காரணமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவருக்கு ஹேம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டதாக தெரிய வந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில், காயம் குறித்து பேசிய அவர் "இன்னும் 24 அல்லது 48 மணி நேரங்களில் கூடுதல் விவரம் தெரியும். இது பொதுவாக நடப்பதுதான். என் உடலை பற்றி எனக்கு தெரியும். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் திரும்பி விடுவேன்" என்று கூறினார்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி க்ளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் ரொனால்டோவின் ஜுவென்டஸ் அணி, காலிறுதி சுற்றில் அஜாக்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட ரொனால்டோ திரும்புவார், என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், காயத்தின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, அஜாக்ஸுக்கு எதிராக ரொனால்டோவுக்கு ஓய்வளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close