அடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா? இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 05:04 am
la-liga-to-conduct-camps-across-india

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் கால்பந்து லீக், இந்தியாவில் கால்பந்தை பரப்பும் நோக்கத்தோடு, நாடு முழுவதும் 8 நகரங்களில், சிறுவர்களுக்கான கால்பந்து பயிற்சி முகாம்களை துவக்க உள்ளது.

உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களுள் ஒன்றான ஸ்பானிஷ் லீக் 'லா லிகா', மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட உலகப்புகழ் வீரர்கள் விளையாடிய பெருமையை கொண்டது. லா லிகா நிர்வாகம், இந்தியாவில் கால்பந்தை பிரபலப்படுத்துவதற்காக, நவீன முகாம்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முகாம்களை இந்தியா முழுவதும் 8 நகரங்களில் நடத்த உள்ளதாக லா லிகா தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, த்ரிசூர், கோழிக்கூடு, சூரத், பெங்களூரு, கொச்சி, புனே ஆகிய நகரங்களில் இந்த கால்பந்து முகாம்கள் நடைபெறும். இதில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு, சர்வதேச அளவில் பயிற்சி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை முகாம்கள் நடைபெறும். பயிற்சிகள் அனைத்தும், தொழில்நுட்ப ரீதியாகவும், நவீன முறையிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கால்பந்து மேலும் பிரபலமாகும் என்றும் லா லிகா தலைமை கருதுகிறது.

இதுபோக, இந்திய கால்பந்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் முகாம்களும் ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பயிற்சியாளர்களால் இங்குள்ள இளம் வீரர்களுக்கு நவீன முறையில் பயிற்சி அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close