• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

நான்கு நாடுகள் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

  நந்தினி   | Last Modified : 17 Jan, 2018 03:36 pm


நியூசிலாந்தில் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டித் தொடர் இன்று தொடங்கியது. நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் இந்திய அணியும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளது. இன்று நடந்த துவக்க போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில், மான்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. இந்திய அணி சார்பில், ருபிந்தர் சிங், விவேக் சாகர் பிரசாத் தலா இரண்டு கோல் போட்டனர். தில்ப்ரீத் சிங், ஹர்மான்ப்ரீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.