• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

  நந்தினி   | Last Modified : 18 Jan, 2018 12:14 pm


நியூசிலாந்தில் நடந்து வரும் நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணியால் தோற்கடிப்பட்டது. நேற்று நடந்த துவக்க போட்டியில் ஜப்பான் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த இந்தியா, இன்றைய போட்டியில் ஒரு கோல் கூட எடுக்க முடியாமல் திணறியது.

ஆட்டத்தின் துவக்கம் முதலே பெல்ஜியத்தின் கை தான் ஓங்கி இருந்தது. போட்டியின் 7-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அர்தர் டி ஸ்லோவர், முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், முதல் பாதி ஆட்ட முடிவில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்தில் போராடிய இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும், கோல் போட முடியவில்லை. 

இதன் பின், கிடைத்த மூன்றாவது பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்தியா தவறவிட்டது. இதையடுத்து, விக்டர் விக்னேஸ் அடித்த கோலால், பெல்ஜியம் 2-0 என முன்னிலை வகித்தது. போட்டியின் கடைசி 15 நிமிடங்கள் இருந்த நிலையிலும், இந்தியா வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால், பெல்ஜியம் வெற்றி பெற்றது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.