நான்கு நாடுகள் ஹாக்கி: பைனலில் பெல்ஜியமிடம் இந்தியா தோல்வி

  நந்தினி   | Last Modified : 22 Jan, 2018 12:13 pm


நியூசிலாந்தில் நடந்து வந்த நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா தோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. இதில், பெல்ஜியம் அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அந்த அணியின் டாம் பூன் (4-வது நிமிடம்) மற்றும் செபாஸ்டியன் டாகிர் (36-வது) தலா ஒரு கோல் போட்டனர்.

இந்திய அணியின் மந்தீப் சிங் (19-வது) ஒரு கோல் அடித்தார். இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஏற்கனவே பெல்ஜியம் அணியிடம் 2-0 என வீழ்ந்திருந்தது. நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியின் முதல் பகுதி நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பகுதியின் முதல் ஆட்டத்தில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் வரும் 24ந்தேதி மோதுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close