நான்கு நாடுகள் ஹாக்கி: பெல்ஜியத்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா

  நந்தினி   | Last Modified : 25 Jan, 2018 01:10 pm


நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் இரண்டாம் பாதியின் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியுள்ளது. 

இத்தொடரின் முதல் பாதியில் இந்திய அணி, இறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக களமிறங்கிய இந்தியா, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில், இந்தியாவின் ரூபித்தார் பால் சிங், 4-வது நிமிடத்தில் கோல் அக்கௌன்ட்டை ஓபன் செய்தார். இந்தியாவுக்கு மொத்தம் ஐந்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. இதில், இரண்டு கோல்களை ருபிந்தர் அடித்தார். இதன் பிறகு, 59-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் கோல் அடிக்க, மற்ற இரண்டு கோல்களும் லலித் உபாத்யாய் மற்றும் ஹர்மான்ப்ரீத் சிங்கால் அடிக்கப்பட்டது. முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்த நிலையில், இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close