5 ஆண்டுக்கு ஹாக்கி அணி ஸ்பான்சரானது ஒடிசா!

  நந்தினி   | Last Modified : 15 Feb, 2018 05:28 pm


இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் ஐந்து வருட ஸ்பான்சர் பொறுப்பை ஒடிசா மாநிலம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் தலைமையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி பங்கேற்றது. தவிர சர்வதேச ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஐஓஏ தலைவருமான நரிந்தர் பத்ரா, ஐஓஏ பொதுச் செயலாளர் ராஜீவ் மெஹ்தா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர். 

விழாவில் இந்திய ஹாக்கி அணி ஜெர்ஸியை ஒடிசா முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், "ஒடிசா அரசு, விளையாட்டை ஊக்குவிப்பது மட்டுமின்றி ஹாக்கி போட்டியை வளர்க்கவும் இதனை செய்துள்ளது. தேசத்திற்கு ஒடிசாவின் பரிசு இதுவாகும். இங்கு ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் உள்ளனர். 

இந்தியாவின் தேசிய விளையாட்டு போட்டி ஹாக்கியாக இருக்கும் போது, கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கிரிக்கெட்டை தவிர மற்ற போட்டிகளுக்கும் முக்கியதுவம் அளிக்க இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி போட்டிக்கு மிகப்பெரியளவில் வரவேற்பு இருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வரில் தான் நடக்கிறது. 

2014 சாம்பியன்ஸ் ட்ராஃபி, 2017 ஹாக்கி உலக லீக் பைனல் போட்டி உள்ளிட்டவை இங்கு நடந்த நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டியும் புவனேஸ்வரில் தான் நடக்க உள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை உலக கோப்பை போட்டி நடைபெறும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close