இந்தியாவில் நடக்கும் 2018 ஹாக்கி உலக கோப்பையில் பாகிஸ்தான்

  நந்தினி   | Last Modified : 16 Feb, 2018 05:36 pm


ஒடிசாவின் புவனேஸ்வரில் 14-வது ஹாக்கி உலக கோப்பை போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 26 வரை நடைபெற இருக்கிறது. போட்டியை நடத்தும் இந்திய அணி உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக சர்வதேச ஹாக்கி சங்க தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்தார். நேற்று ஹாக்கி இந்தியா, ஒடிசா அரசுடன் ஐந்து வருடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. 

கடந்த 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு, நான்கு முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி தகுதி பெறவில்லை. ஆனால், லண்டனில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்றில் 7ம் இடத்தை பிடித்ததுடன், ஐரோப்பிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவுகள் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடிந்ததாலும், 13-வது அணியாக நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

பாகிஸ்தானுக்கு பிறகு நெதர்லாந்து அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி ஒரு முறை தான் கோப்பையை பெற்றுள்ளது. சமீபகாலமாக இந்திய ஹாக்கி அணி பல வெற்றிகளை பெற்றிருந்தது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியையும் இந்தியா வென்றிருந்தது. இதனால், இந்த முறை நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close