சுல்தான் கோப்பை ஹாக்கி: அயர்லாந்திடம் இந்தியா தோல்வி

  SRK   | Last Modified : 09 Mar, 2018 11:01 pm


மலேசியாவில் நடந்து வரும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில், இந்தியா அயர்லாந்து அணிகள் இன்று மோதின. இதில் அயர்லாந்து 3-2 என இந்தியாவை வீழ்த்தியது.

இந்த தொடரில் மோசமாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, ஒன்றில் டிரா செய்துள்ளது. 

முதலில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ராமன்தீப் சிங் 10வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின், அயர்லாந்தின் ஷேன் டானஹியூ 24வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்தியா கோல் அடித்து மீண்டும் முன்னிலை பெற்றது. 

பின்னர் அதிரடியாக விளையாடிய அயர்லாந்து, 36வது நிமிடத்திலும், 45வது நிமிடத்திலும் கோல் அடித்து போட்டியை வென்றது. 

இந்த தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து, அணிகள் 5வது இடத்துக்கான கடைசி போட்டியில் நாளை மீண்டும் விளையாடுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close