மகளீர் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது தென் கொரியா!

Last Modified : 20 May, 2018 06:01 pm


ஆசிய கோப்பை மகளீர் ஹாக்கி இறுதி போட்டியில், இந்தியாவை 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது தென் கொரியா. ஆனால், இந்தியாவின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக அமைந்ததால், முதல் கால் மணி நேரத்தில், தென் கொரியா எந்த கோலும் அடிக்கவில்லை. ஆனால், இரண்டாவது கால் அணி நேரத்தில், 24வது நிமிடத்தின் போது தென் கொரியாவன் யங்சில் லீ போட்டியின் ஒரே கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். 

அதன்பின் இந்திய மகளீர் போராடி விளைடாடினர். இந்திய கோல் கீப்பர் பல தென் கொரிய வாய்ப்புகளை தடுத்து, உதவினார். கடைசி அரை மணிநேரத்தில், தென் கொரியா பெரும்பாலும் தடுப்பு ஆட்டமே ஆடி, இந்திய அணியை கோல் அடிக்க விடாமல் செய்தது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இது தென் கொரியா வெல்லும் 3வது மகளீர் ஆசிய கோப்பை பட்டமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close