சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 02:49 pm
india-thrash-rivals-pakistan-in-hockey-champions-trophy

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், பாகிஸ்தானை இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் முதல் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியைக் காண ஆயிரக்கணக்கானன் ரசிகர்கள் குவிந்திருந்தனர். போட்டியில் துவக்கத்தில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடியது. அந்த அணி வீரர்கள் திறமையாக இந்திய அட்டாக்கை தடுத்தனர். முதல் கால் மணி நேரத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும், கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது கால் மணிநேரத்தில், இந்தியாவுக்கு இரண்டாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை. 

ஒரு வழியாக 26வது நிமிடத்தில், இந்திய வீரர் ராமந்தீப் கோல் அடித்தார். அதன்பின் பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது கால் மணி நேரத்தில், பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தது. ஆனால், வீடியோ உதவியுடன் மறுபரிசீலனை செய்து அந்த கோலை நடுவர் திரும்பப்பெற்றார். அதன்பின், பாகிஸ்தான் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தது. இதை பயன்படுத்தி, இந்தியா வேகமாக கவுன்ட்டர் அட்டாக் செய்து, மளமளவென 54, 57 மற்றும் 60வது நிமிடங்களில் கோல் அடித்தது. போட்டி 4-0 என முடிந்தது.

அடுத்த போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவுடன் மோதுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close