சாம்பியன்ஸ் ட்ராஃபி: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 10:49 am
india-beats-argentina-for-their-second-win-in-champions-trophy

சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பெற்றது. 

நெதர்லாந்தின் பெர்டாவில் 37-வது ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீஸ்த்தியது. 

இந்திய அணியின் ஹர்மான்ப்ரீத் சிங் (17-வது நிமிடம்), மந்தீப் சிங் (28-வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடித்தனர். அர்ஜென்டினாவின் கோன்சலோ பெயில்லட் ஒரு கோல் போட்டார். 

இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் துவம்சம் செய்திருந்தது. இரண்டு வெற்றிகள் மூலம், ஆறு அணிகள் பங்கேற்றுள்ள போட்டியில், இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 

வருகிற 27ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close