சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 01:08 pm
champions-trophy-hockey-india-lose-2-3-to-world-champion-australia

சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. 

37-வது சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடர் நெதர்லாந்தின் பிரேடா நகரில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்திய அணி, தான் சந்தித்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 

முதல் போட்டியில் இந்தியா 4-0 என பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தியது. இந்த நிலையில், 3-வது ஆட்டத்தில் இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் இந்தியா 2-3 என ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. 

இந்திய தரப்பில், வருண் குமார் 10-வது நிமிடத்திலும், ஹர்மான்ப்ரீத் சிங் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா அணியின் லசியன் ஷார்ப் (6-வது நிமிடம்), டாம் கிரேக் (15-வது), ட்ரெண்ட் மிட்டான் (33-வது) ஆகியோர் கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தனர். 

இந்த தோல்வி காரணமாக, 6 புள்ளியுடன் இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா 7 புள்ளியுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 6 புள்ளியுடன் 2ம் இடத்திலும் உள்ளன.

இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close