சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 12:25 pm
champions-trophy-hockey-india-draw-1-1-with-belgium

சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான தொடர் டிராவில் முடிந்தது. 

நெதர்லாந்தின் பிரேடாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதியது. போட்டியில் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் ஆடிய இந்திய அணி, 1-1 என போட்டியை டிரா செய்தது. 

போட்டியின் துவக்கத்திலேயே இந்தியாவின் ஹர்மான்ப்ரீத் சிங் (10-வது நிமிடம்) அடித்த கோலால், இந்திய அணி 1-0 என போட்டியின் 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் லொயிக் லுயபேர்ட் கோல் அடிக்கும் வரை முன்னிலையில் தொடர்ந்து வந்தது. இதனால் முடிவில் 1-1 என போட்டி டிரா ஆனது. 

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. ரவுண்ட் ராபின் போட்டியில் இந்தியா, நாளை (30ம் தேதி) நடக்கும் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தினால், இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close