உலக கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி கேப்டனாக ராணி ராம்பல்

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 02:43 pm
rani-rampal-named-as-the-captain-of-india-squad-for-women-s-hockey-world-cup

உலக கோப்பைக்கான மகளிர் ஹாக்கி இந்திய அணி கேப்டனாக ராணி ராம்பல் நியமிக்கப்பட்டுள்ளார். 

லண்டனில் அடுத்த மாதம் மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக ஹாக்கி இந்தியாவின் 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் ஜூலை 21ம் தேதி முதல் தொடங்குகிறது. 

பி பிரிவில், உலகின் நம்பர் 2 அணியான இங்கிலாந்து, 7ம் இடம் வகிக்கும் அணியான அமெரிக்கா, 16-வது இடத்தில் இருக்கும் அயர்லாந்துடன், இந்திய அணி இடம் பெற்றுள்ளது. 

ஏ பிரிவில்- நெதர்லாந்து, சீனா, கொரியா, இத்தாலி; சி பிரிவில்- அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா; டி பிரிவில்- ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

இந்திய அணிக்கு ராணி ராம்பல் கேப்டனாகவும், அவருடைய துணை கேப்டனாக கோல் கீப்பர் சவிதா அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

இந்திய அணி விவரம்:- 

கோல் கீப்பர்: சவிதா (துணை கேப்டன்), ரஜனி எட்டிமர்பு

தடுப்பாட்டக்காரர்கள்: சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கவுர், ரீனா க்ஹோகர் 

நடுகள வீராங்கனைகள்: நமீதா டோப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான்

முன்கள வீராங்கனைகள்: ராணி (கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்நீத் கவுர், லால்ரெம்சியாமி, உதிதா.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close