இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராஃபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 09:21 am
india-loses-to-australia-in-champions-trophy-hockey-final

சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோல்வி அடைந்தது. 

நெதர்லாந்தின் பிரேடாவில் 37-வது சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடர் நடைபெற்றது. நேற்று இத்தொடரின் இறுதிச் சுற்று போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டியின் கட்டுப்பாடு நேரமான 60 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையில் இருந்தன. இதனால் பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

இதில் ஆஸ்திரேலியா கோல் கீப்பரான டைலர் லொவெல், இந்திய வீரர்கள் ஹர்மான்ப்ரீத் சிங், சர்தார் சிங் மற்றும் லலித் உபாத்யாய் அடித்த கோலை சிறப்பாக தடுத்தார். 2016ம் ஆண்டு ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலடிக்க தவறிய மன்ப்ரீத் சிங், இந்த முறை கோல் அடித்தார். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் அரன் சாலேவ்ஸ்கி, டேனியல் பெயல் மற்றும் ஜெரேமி எட்வர்ட்ஸ் கோல் அடித்து இந்தியாவை வீழ்த்தினர். 

இதன் மூலம், 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்று, 15-வது சாம்பியன்ஸ் ட்ராஃபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 

1983, 1984, 1985, 1989, 1990, 1993, 1999, 2005, 2008, 2009, 2010, 2011, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று, அதிக சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றிருக்கிறது. 

வரலாற்றில், இரண்டாவது முறையாக 2-வது இடத்தை பிடித்தது இந்திய அணி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close