ஹாங்காங் சீனாவுடன் ஆசிய துவக்க போட்டியில் மோதுகிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 03:24 pm
indian-women-hockey-team-will-open-their-compaign-with-indonesia-in-18th-asian-games

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் 18-வது ஆசிய போட்டிகள், ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 2ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஆகஸ்ட் 22ம் தேதி தனது முதல் ஆட்டத்தை ஹாங்காங் சீனா அணியுடன் எதிர்கொள்கிறது. 

ஏ பிரிவில் கொரியா, ஜப்பான், இலங்கை மற்றும் ஹாங்காங் சீனா அணிகளுடன் இந்திய ஆடவர் அணி இடம் பிடித்துள்ளது. பி பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

ஹாங்காங் சீனாவுக்கு பிறகு இந்தியா, ஆகஸ்ட் 24ம் தேதி ஜப்பான், ஆகஸ்ட் 26ல் கொரியா, ஆகஸ்ட் 28ல் இலங்கையுடன் மோதுகின்றது. 

இதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆகஸ்ட் 19ம் தேதி இந்தோனேசியாவை தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. பி பிரிவில் கொரியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியாவுடன் இந்திய மகளிர் அணி இடம் பிடித்திருக்கிறது. ஏ பிரிவில், சீனா, ஜப்பான், மலேஷியா, ஹாங்காங் சீனா, சீன தைபே ஆகிய அணிகள் உள்ளன. 

இந்திய மகளிர் அணி, இந்தோனேசியாவை தொடர்ந்து கஜகஸ்தான் (ஆகஸ்ட் 21), கொரியா (ஆகஸ்ட் 25), தாய்லாந்து (ஆகஸ்ட் 27) அணிகளை எதிர்கொள்கிறது. 

ஆசிய போட்டிகளிலேயே 18-வது பதிப்பில் தான் ஹாக்கியில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

14 நாடுகளைச் சேர்ந்த 21 அணிகள் நேருக்கு நேர் (ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில்) 60 ஆட்டங்களில் மோதுகின்றன. ஹாக்கி போட்டி மட்டும் 14 நாட்கள் நடைபெறுகின்றன.

வெற்றி பெறும் ஹாக்கி ஆடவர், மகளிர் அணிகள், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்களது அணி பெயரை பதிவு செய்யும். 

அனைத்து போட்டிகளில் ஜகார்தாவின் கெலோரா பங் கர்ணோ விளையாட்டு அரங்கில் நடைபெறும். ஆகஸ்ட் 31ம் தேதி மகளிர் இறுதிச் சுற்று போட்டியும், செப்டம்பர் 1ம் தேதி ஆடவர் இறுதிப் போட்டியும் நடக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close